News November 21, 2024

குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரம்!

image

ஜாதகத்தில் குரு நீசமாக (அ) பகை பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகர்கள் குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்வது நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம். வட ஆலங்குடி எனப் போற்றப்படும் சென்னை போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 14 வாரம் வியாழன் தோறும் சென்று குருவுக்கு மஞ்சள் நிற வஸ்திரம், வெண்கடலை மாலை அணிவித்து, 24 தீபங்களை ஏற்றி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என ஐதீகம்.

Similar News

News December 11, 2025

கரூர்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

கரூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 11, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

image

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் சீல் வைத்து பாதுகாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறனர். வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆராய்ந்தனர். கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

News December 11, 2025

டிச.14 முதல் விருப்ப மனு பெறலாம்: PMK

image

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.14-டிச.20 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என பாமக அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி என இரு மாநிலங்களுக்கும் சேர்த்து, பனையூர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, மனுக்களை பெறலாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். மனுவில், அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!