News November 21, 2024
குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரம்!

ஜாதகத்தில் குரு நீசமாக (அ) பகை பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகர்கள் குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்வது நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம். வட ஆலங்குடி எனப் போற்றப்படும் சென்னை போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் திருக்கோயிலுக்கு 14 வாரம் வியாழன் தோறும் சென்று குருவுக்கு மஞ்சள் நிற வஸ்திரம், வெண்கடலை மாலை அணிவித்து, 24 தீபங்களை ஏற்றி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என ஐதீகம்.
Similar News
News November 17, 2025
பெரம்பலூரில் மழையா? இதை மறக்காதீங்க!

பெரம்பலூர் மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கப்படும்! SHARE
News November 17, 2025
தேனி மக்களே இது கட்டாயம்..!

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் அனுமதி இன்றி தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் வைக்க அனுமதி வழங்குகின்றன. தெருவோர கடை உரிமையாளர்கள் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து ஒப்புதல் பெறுவது கட்டாயம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
News November 17, 2025
தூத்துக்குடி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

தூத்துக்குடி: கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். SHARE பண்ணுங்க.


