News October 1, 2025
திமுக விழாவில் பங்கேற்றவர் கரூர் துயரத்தில் மரணம்

கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் திமுக முப்பெரும் விழாவில் கலந்துக் கொண்ட தம்பியும் உயிரிழந்துள்ளார் எனக் கூறிய அவர், யார் மீது தவறு என பேசாமல், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மேலும், சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூட்டம் அதிகளவில் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Similar News
News October 1, 2025
BREAKING: அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

தீபாவளி பரிசாக, அகவிலைப்படி(DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, DA 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு நிலுவையுடன் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வு வழங்கப்பட உள்ளது. SHARE IT.
News October 1, 2025
BCCI-யிடம் மன்னிப்பு கேட்ட ACC தலைவர்

ஆசிய கோப்பை இறுதி போட்டியின் போது நடந்த சம்பவங்களுக்காக ACC தலைவர் <<17882243>>மொசின் நக்வி<<>> BCCI-யிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சூழல் இந்த அளவிற்கு மோசமடையும் என எதிர்பார்க்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், துபாய் ACC அலுவலகத்திற்கு வந்து கோப்பையை பெற்று கொள்ள வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தை BCCI நிராகரித்துள்ளது.
News October 1, 2025
₹100 நாணயத்தை வெளியிட்ட PM மோடி!

டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் RSS நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட PM மோடி, சிறப்பு ₹100 நாணயத்தை வெளியிட்டார். மேலும், தேசத்திற்கு RSS-ன் பங்களிப்புகளை சிறப்பிக்கும் வகையில் தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறத்தில் பாரத மாதா சிங்கத்துடன் காட்சி தர, அவர் முன் RSS சேவகர்கள் நிற்கின்றனர். தபால் தலையில், RSS-ன் 1963-ம் ஆண்டு குடியரசு தினப் பேரணி காட்சி இடம்பெற்றுள்ளது.