News October 1, 2025
திமுக விழாவில் பங்கேற்றவர் கரூர் துயரத்தில் மரணம்

கரூர் துயர நிகழ்வை அரசியலாக பார்க்க விரும்பவில்லை என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் திமுக முப்பெரும் விழாவில் கலந்துக் கொண்ட தம்பியும் உயிரிழந்துள்ளார் எனக் கூறிய அவர், யார் மீது தவறு என பேசாமல், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார். மேலும், சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூட்டம் அதிகளவில் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Similar News
News December 15, 2025
ஜோர்டனில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த PM மோடி

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு குழந்தைகளுடன் PM மோடி விளையாடி மகிழ்ந்தார். ஜோர்டன் மன்னரை சந்திக்கும் PM மோடி, இந்தியா – ஜோர்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். ஈராக், UAE, சீனாவுக்கு அடுத்தபடியாக ஜோர்டனின் 4-வது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 15, 2025
செல்போனில் இதை செய்தால் ஜெயில் தண்டனை

டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலேயே செல்போனில் எல்லாவற்றையும் அறியலாம். ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடிப் பார்த்தால் ஜெயில் தண்டனை கன்ஃபார்ம். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வது எப்படி என தேடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்கள், காபிரைட்டை மீறி திரைப்படங்களை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றை செய்தாலும் நீங்கள் கம்பி எண்ணுவது உறுதி.
News December 15, 2025
ICC விருதை தட்டித் தூக்கிய இந்திய வீராங்கனை ஷெஃபாலி

ODI WC-ஐ இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஷெஃபாலி வர்மாவுக்கு, மகளிருக்கான ICC Player of the Month விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதிகா ராவலுக்கு காயம் ஏற்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்ட ஷெஃபாலி, WC ஃபைனலில் 87 ரன்கள், 2 விக்கெட்களை கைப்பற்றினார். அதேபோல், SA வீரர் சிமோன் ஹார்மருக்கு ஆண்கள் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. IND-க்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில், இவர் 17 விக்கெட்களை கைப்பற்றினார்.


