News April 3, 2024
ஐபிஎல்லில் புதிய சாதனை

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர், தனது முதல் போட்டியிலேயே 156.7 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இதனால் கவனம் ஈர்த்த அவர், நேற்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை மணிக்கு 155+ கி.மீ வேகத்தில் பந்துவீசிய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.
Similar News
News August 12, 2025
ரொனால்டோ அணிவித்த மோதிரத்தின் விலை தெரியுமா?

உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் <<17376793>>ரொனால்டோவுக்கும் <<>>அவரது நீண்ட நாள் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஓவல் வடிவத்தில் வெட்டப்பட்டுள்ள 25- 30 கேரட் வைர மோதிரத்தின் போட்டோவை ஜார்ஜினா வெளியிட்டுள்ளார். இந்த மோதிரத்தின் விலை சுமார் ₹16.8 கோடி முதல் ₹42 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது உலகின் அதிக விலை கொண்ட மோதிரங்களில் ஒன்று எனவும் கூறப்படுகிறது.
News August 12, 2025
பெண் அரசியல் தலைவர் சுஜாதா காலமானார்

திருச்சி EX மேயரும், காங்., பெண் தலைவர்களில் ஒருவருமான சுஜாதா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மாநில துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2022-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாமன்ற உறுப்பினராக தேர்வான சுஜாதாவை மீண்டும் மேயராக்க வேண்டும் என ஸ்டாலினை நேரடியாக சந்தித்து ப.சி., வலியுறுத்தும் அளவுக்கு திருச்சி முகமாக இருந்தவர்.
News August 12, 2025
ஆசிரியர் தகுதித்தேர்வு தேதியை மாற்ற EPS வலியுறுத்தல்

கல்லறைத் திருநாளன்று <<17372693>>ஆசிரியர் தகுதித் தேர்வு <<>>நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வரை போலவே மக்கள் உணர்வுகளை அறியாமல் அலட்சியமாக திமுக அரசு செயல்படுவதாக சாடியுள்ளார். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.