News November 25, 2024
சரத் பவாருக்கு வந்த புதிய சிக்கல்!

மகாராஷ்டிரா தேர்தலில் தோல்வியடைந்ததால் ராஜ்ய சபாவுக்கு சரத் பவார் மீண்டும் தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 86 தொகுதிகளில் போட்டியிட்ட NCP(SP) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2026 ஏப்ரலில் சரத் பவாரின் ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. அவரது கட்சிக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் மீண்டும் ராஜ்ய சபா எம்.பியாக தேர்வாக முடியாத நிலை உருவாகியுள்ளது.
Similar News
News December 6, 2025
BREAKING: இந்தியா பந்துவீச்சு

தெ.ஆப்., அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கோலி, ருதுராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, குல்தீப், ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரை பறிகொடுத்த நிலையில், இந்தியா கடைசி போட்டியான இன்று வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கவுள்ளது.
News December 6, 2025
முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.
News December 6, 2025
மதுரை புதிய மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர்

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கையின் பெயரை சூட்டுவதில் தனக்கு பெருமை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ₹150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம், 950 மீ., நீளம் கொண்டது.


