News October 17, 2025
கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் வந்தது

உருகுவேயில் தீராத மனநலம், உடல்நலம் பிரச்னைகள் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் செய்யும் கருணைக்கொலை அனுமதிக்கப்படும். ஆனால், நோயாளியே மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள கூடாது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், டாக்டர்களின் அனுமதியை அதற்கு பெற வேண்டும். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
Similar News
News October 17, 2025
உருட்டு கடை அல்வாவுக்கு அமைச்சர் பதிலடி

திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அச்சிட்டு, ‘உருட்டு கடை அல்வா’ என்ற பெயரில் EPS விநியோகித்தது அரசியல் கவனம் பெற்றுள்ளது. ஆனால், இன்ஸ்டா பாலோவர்ஸ்ஸை அதிகரிப்பதற்கு EPS இவ்வாறு அரசியல் செய்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவை திருட்டு கடையாக மாற்றியவர் EPS எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News October 17, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய்யின் அடிப்படை இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, பாமாயில்(100Kg) இறக்குமதி விலை ₹97,504-ல் இருந்து ₹98,824, கச்சா சோயா எண்ணெய் ₹1,03,928-ல் இருந்து ₹1,04,456 ஆக அதிகரித்துள்ளது. <<18028729>>தங்கம்<<>>(10 கிராம்) ₹1,08,328-ல் இருந்து ₹1,16,766 ஆகவும், வெள்ளி(1Kg) ₹1,33,320-ல் இருந்து ₹1,46,344 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் இவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
News October 17, 2025
விஜய்யுடன் நடித்தது சாதனை: மமிதா பைஜு

தனது கடைசி படம் ஜனநாயகன் என விஜய் அறிவித்தபோது கஷ்டமாக இருந்தது என மமிதா பைஜு தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து நடிக்காதது குறித்து தன்னிடம் பலர் கேட்ட நிலையில், அவருடன் நடிப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக கூறினார். அதன்பின்னர் ‘ஜனநாயகனில்’ வாய்ப்பு கிடைத்தபோது, தான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாக பேசியுள்ளார். ஜனநாயகனுக்கு யாரெல்லாம் வெய்ட்டிங்?