News April 20, 2024
₹4.2 கோடியை ஈட்டிய ஐந்து மாத குழந்தை

பிறந்து ஐந்தே மாதங்களான பச்சிளம் குழந்தை ஒன்று ₹4.2 கோடியை ஈட்டியுள்ளது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? தனது பேரக் குழந்தையான எக்கிராஹா ரோஹனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி ₹240 கோடி மதிப்பு கொண்ட 15 லட்சம் பங்குகளை பரிசாக கொடுத்திருந்தார். அவற்றுக்கான 2024 நிதியாண்டுக்கான சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.28 (20+8) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவருக்கு ₹4.2 கோடி கிடைக்க உள்ளது.
Similar News
News August 18, 2025
நாடகம் நடத்தும் காங்கிரஸ்: ஜி.கே.வாசன் தாக்கு

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்., கடந்த ஒருவாரமாக EC-க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன், EC-ஐ காங்., கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்; பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ளார். மேலும், காங்., கூட்டணி பலவீனமாக உள்ளதால், அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகம் நடத்தப்படுவதாகவும் சாடினார்.
News August 18, 2025
கை மார்புக்கு வலு சேர்க்கும் சதுரங்க தண்டாசனம்!

✦கைகள், தோள்கள், மார்பு, மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
➥தரையில் குப்புற படுத்து கொள்ளவும். பிறகு இடுப்பை மேலே உயர்த்தி, கைகளில் அழுத்தம் கொடுத்து, கால் & மார்பை தரையில் படும்படி கீழிறக்கவும்.
➥பிறகு, கால் தரையில் இருக்க, மேல் உடம்பை மட்டும் மேலே உயர்த்தவும். இந்த நிலையில் 15- 20 விநாடிகள் இருந்து விட்டு, பிறகு கால்களையும் உடலுக்கு நேராக இருக்கும் படி உயர்த்தவும்.
News August 18, 2025
திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது: அன்புமணி

வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பது தான் தனது ஆசை என அன்புமணி தெரிவித்துள்ளார். பர்கூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 350 சாதிகள் உள்ளன. அதில் எந்தெந்த சாதிகள் இன்னும் முன்னேறவில்லை, யார் எல்லாம் பின்தங்கிய நிலையில் உள்ளனர், கல்வியறிவு முழுமையாக பெற்றிருக்கிறார்களா என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமென்றார்.