News April 15, 2025

8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்!

image

பாளையங்கோட்டை பள்ளியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த 2 பேரும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் இப்படியான வெறிச்செயலில் ஈடுபட்டிருப்பது கவலைக்குரிய விஷயம்தான்.

Similar News

News November 16, 2025

USA வரிவிதிப்பால் ₹7,064 கோடி நஷ்டம்

image

அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவின் ரத்தின கற்கள், வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2024 அக்டோபரில் ₹26,237 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற்போது ₹19,173 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், பொம்மை பொருள்களின் ஏற்றுமதியும் வெகுவாக குறைந்துள்ளது. இந்திய பொருள்களின் அதிக விலை காரணமாக, அமெரிக்க வாடிக்கையாளர்கள் பிற நாடுகளின் இறக்குமதிகளை வாங்கி வருகின்றனர்.

News November 16, 2025

ஐசக் நியூட்டன் பொன்மொழிகள்

image

*ஒரு எளிய உண்மையைக் கண்டறிவதற்கு பல ஆண்டுகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். *நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு. *ஒவ்வொரு வினைக்கும், அதற்கு சமமான எதிர்வினை உண்டு. *மேலே சென்றால் கட்டாயம் கீழே வர வேண்டும். *நான் எப்போதாவது மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தால், அது வேறு எந்த திறமையையும் விட அதிக பொறுமையாக கவனித்ததே காரணம்.

News November 16, 2025

TN SIR: 26,000 குடும்பங்களுக்கு பெரிய சிக்கல்

image

தமிழகத்தில் SIR காரணமாக சென்னை, பெரும்பாக்கம் காலனியில் 26,000 குடும்பங்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்கள், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு முறையான முகவரியும், அதற்கான ஆவணங்களும் இல்லை. இதனால், அவர்களின் வாக்குரிமை உறுதி செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!