News March 20, 2024
தினம் ஒரு தொகுதி: இன்று கடலூர்

மீன்பிடித் தொழிலையும், முந்திரி, பலா விவசாயத்தையும் முக்கிய தொழிலாக கொண்டது கடலூர் தொகுதி. திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 18 தேர்தல்களில் காங். 7, திமுக 5 & அதிமுக 2 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
Similar News
News November 13, 2025
அர்ஜுன் டெண்டுல்கரை கழற்றிவிட்ட மும்பை?

சஞ்சு சாம்ஸன்-ஜடேஜா டிரேடிங்கை தொடர்ந்து, வேறு சில அணிகளும் வீரர்களை பரிமாற்றிக் கொள்ள முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் சர்துல் தாக்கூரை அவரது அடிப்படை ஏலத் தொகையான ₹2 கோடிக்கு மும்பை அணிக்கு டிரேட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கரை பெற்றுள்ளதாகவும் ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News November 13, 2025
இது ஐபோன் பாக்கெட்.. ₹26,000 மட்டுமே

ஐபோன்களை எளிதில் எடுத்துச் செல்வதற்காக ஆப்பிள் நிறுவனம் கலர் கலரான பைகளை அறிமுகம் செய்துள்ளது. fabric பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள அந்த பையில் ஐபோனை வைத்து கை, தோளில் மாட்டிக்கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி ₹26,000 மட்டுமே ஆகும். இது பார்ப்பதற்கு பாட்டி காலத்து சுருக்கு பை போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.
News November 13, 2025
விதவிதமாக நிறங்களில் கண்கள் – ஸ்வைப் பண்ணுங்க

உலகில் மனிதர்கள் பல விதம் என்பதுபோல, கண்களின் நிறங்களும் பல விதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலும், அரிதாக சிலருக்கு மட்டுமே பிற வண்ணங்களில் உள்ளன. என்னென்ன வண்ணங்களில் கண்கள் உள்ளன, அவை எத்தனை சதவீத மக்களுக்கு உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


