News November 21, 2024

புதிய உச்சத்தில் கிரிப்டோகரன்சி

image

பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. கடந்த வாரத்தில் 90,000 டாலராக இருந்த பிட்காயின் மதிப்பு, தற்போது 94,400 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு ₹250 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Similar News

News December 9, 2025

காதலியின் சர்ச்சை போட்டோ.. கொந்தளித்த ஹர்திக்

image

தனது காதலி மஹிகா சர்மாவை ஆபாசமாக போட்டோ எடுத்த புகைப்பட கலைஞர்களை ஹர்திக் பாண்ட்யா கடிந்து கொண்டுள்ளார். பரபரப்புக்காக மலிவான செயலில் ஈடுபடுவது சரியல்ல என்றும், புகைப்பட கலைஞர்கள் பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் சிலர் மஹிகா சர்மாவை சாடினாலும், ஆடை சுதந்திரம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

News December 9, 2025

ராஜீவ் காந்தி – சோனியா.. நீங்கா நினைவுகள் PHOTOS

image

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின், சோனியா காந்தியின் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. இத்தாலியில் பிறந்த அவர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று, 2 முறை காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அவரது 79-வது பிறந்த நாளில், ராஜீவ் காந்தியுடன் இருக்கும் சில மறக்க முடியாத போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 9, 2025

TOSS: இந்திய அணி பேட்டிங்

image

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பிளேயிங் லெவனில் அபிஷேக், கில், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ஜித்தேஷ், அக்‌ஷர், பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின் டி20-ல் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளதால் பேட்டிங் மற்றும் பவுலிங்கின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!