News November 20, 2024
அடுத்தடுத்து டைவர்ஸ்… எங்கே செல்கிறது சினிமாத்துறை!
கலாசாரத்தை சீர்கெடுப்பதில் சினிமாவுக்கு முக்கிய பங்கிருப்பதாக மக்கள் மத்தியில் பொதுவான கருத்து உண்டு. அதனை உறுதி செய்யும் வகையில், அத்துறையில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது, சினிமாத்துறை மீதான ஒவ்வாமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வாழ்வில் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழியேற்று இணையும் தம்பதியரால் ஒற்றுமையாக இருக்கவே முடியாதா?
Similar News
News November 20, 2024
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இதனை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக, பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
News November 20, 2024
தொடங்கியது திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது. கட்சிப் பணிகள், சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள், கூட்டணி பேச்சுவார்த்தை, மாவட்டச் செயலாளர்களின் தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
News November 20, 2024
கஸ்தூரியை வெளியே விடுங்க ப்ளீஸ்… அவங்க பாவம்
நடிகை கஸ்தூரியோட பெயில் பெட்டிஷன்ல அவங்க என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? தனக்கு ஆட்டிசம் பாதித்த ஒரு மகன் இருப்பதாகவும், அவரை தனியாத்தான் கவனிச்சிட்டு வர்றதாகவும் சொல்லியிருக்காங்க. இதனால, கஸ்தூரி தப்பே செஞ்சிருந்தாலும், அவங்கள ஜெயில்ல இருந்து வெளியே விட்டுடுங்கனு சமூக வலைதளங்கள்ல கோரிக்கை எழுந்துட்டு இருக்கு.