News November 19, 2024
நடிகை மூன் மூன் சென் கணவர் காலமானார்!

பெங்கால் திரையுலகில் பிரபலமான நடிகை மூன் மூன் சென்னின் கணவர் பாரத் தேவ் வர்மா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது(83). நடிகை மூன் மூன் சென் வீட்டிற்கு நேரில் சென்ற மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரத் தேவ் வர்மாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மறைந்த பாரத் தேவ் வர்மாவுக்கு ரைமா, ரியா சென் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
Similar News
News August 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 29, 2025
பிரதீப் ரங்கநாதனின் சட்டை ஸ்டோரி தெரியுமா ?

விஜய்யை போல நடிகர் PR மேடைகளில் குட்டி கதை சொல்பவர். தற்போது அவர் பேசிய சட்டை ஸ்டோரி செம வைரல். சாதா சட்டை போட்ட பையன் உழைச்சு காஸ்ட்லி சட்டை போட்டா, பழச மறந்துட்டனு சொல்லுவாங்க. சரின்னு பழைய சட்டை போட்டா, நடிக்கிறனு சொல்லுவாங்க. சட்டைய கிழிச்சுட்டா, பைத்தியம்னு சொல்லுவாங்க. பிறருக்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால் பைத்தியம் ஆகிடுவோம். எனவே வாழ்க்கைய நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும் என்று அவர் கூறினார்.
News August 29, 2025
9 மாதங்களுக்கு பிறகு சீரடைந்த இந்தியா – கனடா உறவு

9 மாதங்களுக்கு பிறகு கனடாவுக்கான இந்திய தூதராக தினேஷ் பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்தியாவிற்கான கனடா தூதராக கிறிஸ்டோபர் கூட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டின் அப்போதைய PM ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, இந்திய தூதர் திரும்ப பெறப்பட்டார்.