News November 19, 2024
கீர்த்தி சுரேஷின் கணவராகப் போகும் ஆண்டனி

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமீபமாக வெளியாகி வருகிறது. அது யாருடன், எப்போது, எங்கு என்ற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ‘ஆண்டனி தட்டில்’ என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் கோவாவில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Similar News
News March 21, 2026
மதுரை: முன்னாள் அமைச்சர் மீது புகார்

திருமங்கலம் தொகுதியில் தொடர்ந்து தேர்தல் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இன்று (21.03.26) திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் அவர்களிடம் மதுரை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி & தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
News March 21, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. மகிழ்ச்சியான அறிவிப்பு

மாநிலங்களுக்கான LPG ஒதுக்கீட்டை 50% வரை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 18-ல் LPG ஒதுக்கீடு 30% அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அரசுகளின் கீழ் இயங்கும் உணவகங்கள், கேண்டீன்கள், பால் உற்பத்தி நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக LPG ஒதுக்கீட்டு கூடுதலாக 20% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை, 5 Kg சிலிண்டர் பயன்படுத்தும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 21, 2026
அதிமுக கண்டிப்பாக வாஷ் அவுட் ஆகும்: LK சுதீஷ்

கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் <<19439225>>தேமுதிகவுக்கு சீட் குறைக்கப்படுவதாக<<>> தகவல் வெளியானது. இந்நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை என LK சுதீஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. தற்போது தேமுதிகவின் வரவால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார். அதே சமயம் அதிமுக கண்டிப்பாக வாஷ் அவுட் ஆகும் எனவும் கூறியுள்ளார்.


