News November 19, 2024
கீர்த்தி சுரேஷின் கணவராகப் போகும் ஆண்டனி

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமீபமாக வெளியாகி வருகிறது. அது யாருடன், எப்போது, எங்கு என்ற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ‘ஆண்டனி தட்டில்’ என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் கோவாவில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Similar News
News December 5, 2025
இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த கேலக்ஸி!

பரந்து விரிந்த வான்வெளியில் உள்ள ரகசியங்கள் ஏராளம். அந்தவகையில், இந்திய விஞ்ஞானிகள் Milkyway கேலக்ஸியை போலவே ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்ந்து, 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் இது உருவாகியுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு, இந்திய நதியான Alaknanda-வின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 5, 2025
US போல் இந்தியாவிற்கு உரிமை உள்ளது: புடின்

அமெரிக்கா தங்களிடம் யுரேனியத்தை வாங்கிக் கொண்டே, இந்தியாவை கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று கூறுவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். தங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட அமெரிக்காவிற்கு உரிமை இருப்பது போல், இந்தியாவிற்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உலக எரிவாயு சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை, சில ஆதிக்க நாடுகள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


