News November 18, 2024

பாலியல் புகார்: தனியார் TV பாடகர் கைது

image

தனியார் TV இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமான குருகுகன் (26) பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த பெண் மென்பொறியாளர் அளித்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குகன் தன்னிடம் நெருங்கிப் பழகியதாகவும், பின் தான் கர்ப்பமடைந்ததும் கருவை கலைத்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், தலைமறைவாக இருந்த குகனை இன்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 7, 2026

தி.மலை: முடிந்தது டைம்… ஓடி சென்ற அமைச்சர்!

image

திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி தினம் என்பதால் அமைச்சர் எ.வ. வேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை அளித்தார். இந்த நிகழ்வின் போது தி.மலை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

News March 7, 2026

விஜய்க்கு எதிராக இவரை நிறுத்த திட்டமா?

image

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், அத்தொகுதியை விசிக தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தொகுதி தங்களுக்கு கிடைத்தால், அங்கு விஜய்க்கு எதிராக ஆளூர் ஷா நவாஸை நிறுத்தவும் ஆலோசனை நடக்கிறதாம். ஆனால் மறுபக்கம், விஜய் அங்கு நின்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், திமுக வேட்பாளரே கூட அங்கு களம்காண வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

News March 7, 2026

பழம் சின்னது.. பவர் ரொம்ப பெரியது!

image

➤நாவல்பழம் – நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ➤பப்பாளி – வெண் தோல் பாதிப்பை தடுக்கும். ➤விளாம்பழம் – மலச்சிக்கலை தீர்க்கும். ➤சீத்தாப்பழம் – இதயத்தை பாதுகாக்கும். ➤அத்திப்பழம் – உடல் எடையை குறைத்து எலும்புக்கு வலுசேர்க்கும். ➤கொடுக்காப்புளி – புற்றுநோய் வராமல் தடுக்கும். ➤சப்போட்டா – கண் பாதிப்பை தடுக்கும். அனைவரும் நலமுடன் வாழ அனைவருக்கும் SHARE THIS.

error: Content is protected !!