News November 18, 2024
பாலியல் புகார்: தனியார் TV பாடகர் கைது

தனியார் TV இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமான குருகுகன் (26) பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த பெண் மென்பொறியாளர் அளித்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குகன் தன்னிடம் நெருங்கிப் பழகியதாகவும், பின் தான் கர்ப்பமடைந்ததும் கருவை கலைத்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், தலைமறைவாக இருந்த குகனை இன்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
TVK சின்னம் 15 நிமிடங்களில் உலகப்புகழ் பெறும்: ஆனந்த்

உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வரும் தவெக, தேர்தல் சார்ந்த பணிகளிலும் மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே, விசில், பேட், வெற்றி கோப்பை, மோதிரம் போன்ற சின்னங்கள் தவெக பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தவெகவின் சின்னம் பற்றிய தகவல்கள் வெளிவரும் 15 நிமிடங்களில் உலகப்புகழ் பெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்படி என்ன சின்னமா இருக்கும்?
News December 16, 2025
100 நாள் வேலைத்திட்ட மாற்றம்: திமுக நோட்டீஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, VB-G Ram G திட்டத்துக்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் திமுக MP டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். முன்னதாக, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு சின்னாபின்னமாக்குவதாக <<18573575>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார்.
News December 16, 2025
இன்று முதல் திருச்சி-சென்னை AIRBUS சேவை

இன்று முதல் டிச.31 வரை திருச்சி-சென்னை இடையிலான ATR விமான சேவைகளை Indigo ரத்து செய்துள்ளது. 76 இருக்கை வசதி கொண்ட ATR விமான சேவைக்கு பதில், காலை 10:35, மாலை 5:55 என 2 நேரங்களில் AIRBUS இயக்கப்படவுள்ளது. இந்த AIRBUS-ல் அதிகபட்சமாக 180 பேர் பயணிக்க முடியும். கிறிஸ்துமஸ், New Year பண்டிகை கால விடுமுறையை கணக்கிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த தற்காலிக மாற்றத்தை செய்துள்ளதாக Indigo கூறியுள்ளது.


