News November 18, 2024
சபரிமலை ஐயப்பன் சிலை சென்னையில் இருந்ததா?
சபரிமலையில் 1952’இல் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், புதிய ஐயப்பன் சிலை செய்யப்பட்டு, பல இடங்களுக்கு புனித யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. அப்படி சென்னை மண்ணடி கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சிலை வந்தபோது, மீண்டும் சபரிமலைக்கு கொண்டு செல்ல தேவஸ்தானம் தரப்பில் சற்று காலதாமதமானது. இதன் காரணமாக, 3 நாட்கள் ஐயப்பன் சிலை கோயிலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 20, 2024
திமுக அனைத்திலும் தோல்வி: எச்.ராஜா சாடல்
திமுக அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திமுக அனைத்து விதத்திலும் தோற்றுப்போய் விட்டதாக விமர்சித்த அவர், தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கனிமொழி ஏன் கண்டிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு நிர்வாகத்தில் CM ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 20, 2024
19 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணையும் த்ரிஷா?
RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் ‘ஆறு’ படத்துக்குப் பின் 19 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
News November 20, 2024
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 வீரர்கள் பலி
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவில் உள்ள சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 12 ராணுவ வீரர்களும், தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் பலியாகினர். குவெட்டா ரயில் நிலைய தாக்குதலின் பதற்றம் தணிவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.