News November 18, 2024
ஜெயிலுக்குள் கஸ்தூரி..! இத்தனை நாளா..
தெலுங்கு பேசும் மக்களையும், பெண்களையும் இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவரை சென்னை தனிப்படை போலீசார் பிடித்தனர். இதையடுத்து, நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் 29-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News November 20, 2024
மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
News November 20, 2024
2 மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சி? WAY2NEWSஇல் EXIT POLL
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவுபெறவுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்குகள் குறித்த தகவலை வைத்து, யார் அங்கு அடுத்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்ற EXIT POLL விவரத்தை WAY2NEWS வெளியிடவுள்ளது. இதை தெரிந்து கொள்ள WAY2NEWSஇல் தொடர்ந்து இணைந்திருங்கள்.
News November 20, 2024
10 நாட்களில் அண்ணாமலை ரிட்டன்ஸ்
பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் லண்டனில் இருந்து காணொலி மூலம் பங்கேற்ற அண்ணாமலை, அதிமுக கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் சிலரின் கருத்துகளால் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டார். எனவே கூட்டணி தொடர்பாக யாரும் எவ்வித கருத்தும் கூறக்கூடாது என நிர்வாகிகளை அறிவுறுத்திய அவர், 10 நாள்களில் தமிழகம் திரும்பி, மீண்டும் கட்சிப்பணிகளை தீவிரமாக முன்னெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.