News November 18, 2024
இன்று TNPSC தேர்வு: ‘டைம்’ ரொம்ப முக்கியம்
டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு இன்றும் (நவ.18), நாளையும் (நவ.19) நடைபெறவுள்ளது. சிமெண்ட் கார்ப்பரேஷன் கழகம், கல்லூரி லைப்ரேரியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9.30-க்கும், மதியம் 2.30-க்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வறைக்கு காலை 8.30, மதியம் 1.30-க்குள் வர வேண்டும். அரை மணிநேரம் கிரேஸ் டைம் உண்டு. அதை தாண்டக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
EXIT POLLS: ஜார்கண்டில் பாஜக வெல்லும் என கணிப்பு
People’s Pulse நடத்திய EXIT POLLS கணிப்பில், ஜார்கண்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக 42- 48 தொகுதிகளில் வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஹேமந்த் சோரனின் JMM கட்சி 16-23 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் 8-14, AJSU 2-5, பிற கட்சிகள் 6-10 வெற்றி பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
ABP: மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி என கணிப்பு
ஏபிபி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணி 150 முதல் 170 தொகுதிகளை வென்று ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை 8 முதல் 10 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.
News November 20, 2024
தேர்தல் முடிந்தது… வே2நியூஸில் விரைவில் EXIT POLL
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் தலைவர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வே2நியூஸில் கருத்துக் கணிப்புகள் வெளியாகும். காத்திருங்கள்!