News November 18, 2024
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டி: இந்திய அணி அபாரம்

ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47 மற்றும் 48ஆவது நிமிடங்களில் தீபிகாவும், 37ஆவது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுரும் கோல் அடித்தனர். இதனால், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அரையிறுதியில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது.
Similar News
News March 15, 2026
விஜய்க்காக காத்திருக்கிறாரா இபிஎஸ்?

விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக, இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து EPS பேசவில்லை என கூறப்பட்டது. இதற்கிடையில், இளம், நடுத்தர வயது வாக்காளர்கள் திமுகவை விட தவெகவிற்கே அதிகம், இத்தேர்தலில் விஜய் கிங் மேக்கராக இருப்பார் என நேற்று வெளியான IPDS கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. தற்போது விஜய் டெல்லியில் இருக்கும் சூழலில் 80 தொகுதி ஆஃபருடன் ADMK கூட்டணியில் TVK இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
பெண் போலீஸ் பலாத்காரம் .. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

கோவையில் 45 வயதான பெண் காலவரை, உயர் அதிகாரியே பலாத்காரம் செய்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் உயர் அதிகாரி, காலவரை தனியாக விட்டு சென்ற நிலையில், அலுவலக அறையிலேயே வைத்து சிறப்பு காவல்படையில் SP அந்தஸ்தில் இருக்கும் செந்தில்குமார் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார். இதுதொடர்பான புகாரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
News March 15, 2026
5 மாநில தேர்தல்: சற்றுமுன் ECI அழைப்பு விடுத்தது

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பட்டியல் மாலை 4 மணிக்கு வெளியாகிறது. இதற்காக பத்திரிகையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ECI அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக தேர்தல் தேதி இன்று வெளியாகும் என <<19387178>>ANI நிறுவனம் தகவலாக<<>> செய்தி வெளியிட்டிருந்தது. சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாலை 4 மணிக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.


