News November 18, 2024
ஆசிய மகளிர் ஹாக்கி போட்டி: இந்திய அணி அபாரம்

ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47 மற்றும் 48ஆவது நிமிடங்களில் தீபிகாவும், 37ஆவது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுரும் கோல் அடித்தனர். இதனால், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அரையிறுதியில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது.
Similar News
News December 10, 2025
அதிருப்தியில் இருக்கிறாரா அதிமுக EX அமைச்சர்?

செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுக EX அமைச்சர் <<18519607>>மாஃபா பாண்டியராஜனும்<<>> TVK-ல் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ADMK பொதுக்குழுவில், 13-வது தீர்மானம் வாசிக்கப்பட்ட போது அதை முன்வைத்தவர்களில், மாஃபாவின் பெயரையும் சிவி சண்முகம் குறிப்பிட்டார். ஒருவேளை மாஃபா அதிருப்தியில் இருந்தால் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. எனவே, அவர் தவெகவில் இணைய வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
News December 10, 2025
வங்கிக் கணக்கில் பணம்.. பிரதமர் மோடி அறிவித்தார்

இந்திய வங்கிகளில் உள்ள ₹78,000 கோடி உரிமை கோரப்படாத பணத்தை கஸ்டமர் (அ) குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். ‘Your Money, Your Right’ திட்டத்தில் ₹2,000 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள பணத்தை எடுக்க <
News December 10, 2025
காங்., அமமுக விருப்ப மனுக்கள் விநியோகம்

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில், அமமுக & காங்., கட்சிகள், இன்று முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். அமமுகவில் தமிழகத்தில் போட்டியிட ₹10,000, புதுச்சேரிக்கு ₹5,000 செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். காங்.,கில் கட்டணமின்றி விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விருப்பமுடையவர்கள் மனுக்களை வாங்கி வருகின்றனர்.


