News March 19, 2024

வீட்டிலிருந்து வாக்களிக்க 20ஆம் தேதி முதல் படிவம்

image

85 வயதுக்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான படிவம், வருகிற 20ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்பட இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான 12டி படிவம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளது” என்றார்.

Similar News

News September 16, 2025

இபிஎஸ், விஜய் வரிசையில் நயினார்..!

image

அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் தழுவிய தேர்தல் சுற்றுப் பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தினமும் 3 தொகுதிகளில் மக்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு நாளும் 3-வது தொகுதியில் பொதுக் கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இபிஎஸ், விஜய் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில், நயினாரும் களமிறங்குகிறார்.

News September 16, 2025

Good Mood ஹார்மோன் சுரக்க..

image

டோபமைன் என்ற அழைக்கப்படும் Good Mood ஹார்மோன் நமது அன்றாட வாழ்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டோபமைன் மகிழ்ச்சி, பாசிட்டிவ் mood, மோட்டிவேஷன், நல்ல தூக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு வழிவகை செய்கிறது. இந்த டோபமைன் சரியான அளவில் சுரக்க என்ன செய்ய வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா கமெண்ட்ல சொல்லுங்க.

News September 16, 2025

பணத்துக்காக படுக்கையை பகிர மாட்டேன்: தமிழ் நடிகை

image

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை தனுஸ்ரீ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் வாய்ப்புகளை மறுத்து வருவதாக தெரிவித்த அவர், ‘இந்த ஆண்டு ₹1.65 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால், ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒரே படுக்கையில் இன்னொருவருடன் உறங்க நான் விரும்பவில்லை. ஆண்களும் பெண்களும் ஒரே ஹாலில், ஒரே பெட்டில் படுத்திருப்பதை நான் எப்படி ஏற்க முடியும்?’ என்று கொட்டித் தீர்த்துள்ளார்.

error: Content is protected !!