News March 19, 2024
உலகின் மிகவும் நீளமான தோசை இதுதான்!

பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடலுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர், 54 அடி நீளமான தோசையே, உலகின் நீளமான தோசையாக சாதனை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
Similar News
News December 29, 2025
மகளிர் மாநாட்டால் சங்கி கூட்டத்துக்கு தூக்கம் வராது: DCM

நிதி, கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமையாக மத்திய அரசு பறித்து வருவதாக DCM உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சுயமரியாதை கொண்ட மகளிர் உள்ளவரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை நெருங்க முடியாது எனவும் சாடியுள்ளார். இந்த மாநாட்டை பார்த்து அடுத்த 10 நாள்களுக்கு சங்கி மற்றும் அடிமை கூட்டத்துக்கு தூக்கம் வராது என்றும் விமர்சித்துள்ளார்.
News December 29, 2025
யாராவது கீழே விழுவதை பார்த்தால் சிரிப்பு வருவது ஏன்?

ஒருவர் கீழே விழுவதை பார்த்ததும் பல சமயங்களில் நமக்கு சிரிப்பு வந்திருக்கும். இதற்கு நமது மூளையில் உள்ள மிரர் நியூரான்கள்தான் காரணமாம். அதாவது, ஒருவர் கீழே விழும்போது, நாமே விழுவது போன்ற ஒரு பிரம்மையை இந்த மிரர் நியூரான்கள் ஏற்படுத்துமாம். அப்போது உடம்பில் கிச்சுகிச்சு மூட்டுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதால் சிரிப்பு வருவதாக அறிவியல் சொல்கிறது. 99% பேருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 29, 2025
நகை கடன்.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தங்கத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக வங்கிகள் <<18695058>>நகை கடன் மதிப்பை குறைத்துள்ளன<<>>. இந்நிலையில், அதிக தொகையுடன் குறைவான வட்டியில் நகை கடன் பெற வழி உள்ளது. உங்களிடம் விவசாய நிலத்திற்கான பட்டா இருந்தால், விவசாய நகை கடன் பெற முடியும். இதில், அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பில் 85% வரை பணம் பெறலாம். மேலும், 7% வரையே வட்டி விகிதம் இருக்கும். அதிக கடன் தேவைப்படுபவர்களுக்கு இது உதவியாக இருக்கும். SHARE IT.


