News March 19, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
Similar News
News September 7, 2025
மீனுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடவே கூடாது!

மீன் சாப்பிடுவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில், மீனுடன் சேர்த்து சில உணவு பொருள்களை சாப்பிடுவது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். அந்தவகையில், மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத சில உணவுப் பொருள்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா பட்டியலிட்டுள்ளார். மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.
News September 7, 2025
சட்டம் அறிவோம்: மனைவி பொய்யாக குற்றம்சாட்டினால்..

விவாகரத்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் சில மனைவிகள், கணவர் மற்றொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என பொய்யாக குற்றம் சாட்டலாம். இந்த சூழலில், கணவருக்கு BNS பிரிவு 356 உதவும். இது ஒருவரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க அவதூறான கருத்துக்களைப் பரப்புவது தொடர்பான குற்றங்களைக் கையாள்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடம் வரை எளிய சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். SHARE IT.
News September 7, 2025
புதன்கிழமை பள்ளிகளுக்கு… வந்தது அறிவிப்பு!

அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் MBC, சீர்மரபினர் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, மாணவிகளின் வங்கி கணக்கு, ஆதார் உள்ளிட்ட விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 1.20 லட்சம் மாணவிகளின் விவரங்கள் முழுமையாக பதிவாகவில்லை என்றும் அதனை செப்.10-க்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.