News March 18, 2024
கடலூர்: பேருந்து சக்கரத்தில் பாய்ந்து ஒருவர் பலி

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் இன்று(மார்ச்.18) அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்னை புறப்பட தயாரான அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் திடீரென பாய்ந்து விழுந்ததில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வர்களுக்கு சேவையாற்றும் ஆய்வாளர் குழு உறுப்பினர் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை அறிய www.hajcommittee.go.in என்ற இணைய முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
கடலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

கடலூர் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News October 30, 2025
கடலூரில் நாளை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,31) “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமராட்சி வட்டம், உசுப்பூர் அடுத்த விபூஷ்ணபுரம், ஹரி மகால், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைமேடு, அரசினர் மேல்நிலைப்பள்ளி, நல்லூர் வட்டம், எறையூர், சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


