News March 18, 2024
விருதுநகர்: துப்பாக்கி பயன்படுத்த தடை!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதியின்படி உரிமம் பெற்று சொந்த துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இந்நிலையில் சிவகாசி உட்கோட்டத்தில் 40 பேர் சொந்த கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் அனைவரும் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைத்துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும் என சிவகாசி உட்கோட்ட காவல்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News April 3, 2025
சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு

விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இந்த சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் இன்று கிடைத்துள்ளது. சம்பா வத்தல் விருதுநகரின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும், இதுவரை ஒட்டுமொத்த தமிழகத்துக்கு 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 3, 2025
விருதுநகரில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
மீண்டும் சூடு பிடிக்கும் தர்பூசணி விற்பனை

கந்தக பூமியான சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாரல் மழை பெய்ததன் காரணமாக தர்பூசணி விற்பனை மந்தமாகி தேக்கமடைந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மீண்டும் தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திண்டிவனத்திலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தர்பூசணி கிலோ ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.