News March 18, 2024
திருப்பத்தூர் அருகே 9 லட்சம் பறிமுதல்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 13, 2025
தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் சக்தி நகர் பகுதியில் உள்ள தூயநெஞ்ச கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 13) தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் மொழி இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை கொண்ட மொழி அதனை மாணவர்கள் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
News August 13, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்வுக்கூட்டம்

திருப்பத்தூரில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.08.2025) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் புதூர்நாடு, ஆம்பூர் பொதுமக்களிடம் மொத்தமாக 47 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்கள்.
News August 13, 2025
திருப்பத்தூர்: கிராம சாபை கூட்டம் மக்களுக்கு அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வருகின்ற (15-08-2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் 2025 -ஆம் ஆண்டிற்கான சுதந்தர கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுசெலவினம் , தணிக்கை அறிக்கை , குடிநீர் விநியோகத்தின் உறுதி , அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .