News March 18, 2024
திருப்பத்தூர் அருகே 9 லட்சம் பறிமுதல்

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 26 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
Similar News
News July 5, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 5) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News July 5, 2025
திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜுலை-04) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் விதமாக விருது மற்றும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 11-07-2025 அன்றுக்குள் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தார்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <