News March 18, 2024

திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

image

போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேரை கைது செய்ய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தின் நிலைமையை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 9, 2025

புரதச்சத்து நிறைந்த டாப் 5 உணவுகள்

image

உடலில் புது செல்கள் உருவாவதற்கும், சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கும் புரதச்சத்து மிக அவசியமானது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்தை போதுமான அளவு கொடுக்க வேண்டும். நாம் நமது உடல் எடைக்கு ஏற்ப அன்றாடம் புரதச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உதாரணமாக 70 கிலோ எடையுள்ள நபர் 55 முதல் 70 கிராம் புரதம் சாப்பிடுவது நல்லது.

News September 9, 2025

அடுத்த துணை ஜனாதிபதி யார்? மாலையில் முடிவுகள்

image

இந்தியாவின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் சில மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் 422 எம்.பி.க்களின் ஆதரவு சிபி ராதாகிருஷ்ணனுக்கு இருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது.

News September 9, 2025

சமூக வலைதளங்களுக்கு விதித்த தடை நீக்கம்

image

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை அந்நாட்டு அரசு நீக்கியது. 26 சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து காட்மாண்டுவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 19 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு அமைச்சரவை அவசரமாக கூடி சமூக வலைதளங்களுக்கான தடையை நீக்கியுள்ளது. இதை IT அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!