News October 14, 2024
IT ஊழியர்களுக்கு WORK FROM HOME: முதல்வர் அதிரடி

சென்னையில் நாளை முதல் மிக கனமழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் (அக்.16) ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அக்.15 முதல் அக்.18 வரை சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு WORK FROM HOME கொடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 17, 2025
சேலம்: 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயம்!

சேலம் அம்மாப்பேட்டையில் 16 வயது மாணவியுடன் டியூசன் டீச்சர் மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோரும், டியூசன் டீச்சரின் பெற்றோரும் அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். எங்கே போனார்கள்? சென்னை சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
News August 17, 2025
சொத்து பதிவு இனி ரொம்ப ஈசி.. தமிழக அரசின் புதிய மாற்றம்

சொத்துகளை வாங்குவது, விற்பதில் உள்ள சிக்கல்களை குறைக்க ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த TN அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ, வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்தாண்டு இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம். SHARE IT.
News August 17, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுக்கும்: IMD

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, செ.பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், க.குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. உங்க ஊருல மழையா?