News October 12, 2024
மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை: ராகுல்

திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என ராகுல் தெரிவித்துள்ளார். பல விபத்துகளில், பல உயிர்கள் பறிக்கொடுக்கப்பட்டாலும் எந்த பாடமும் இந்த அரசு கற்கவில்லை என விமர்சித்த அவர், மத்திய அரசே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
Similar News
News August 9, 2025
FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹200 குறைந்தது

இந்த வாரம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(ஆக.9) சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,445-க்கும், சவரன் ₹75,560-க்கும் விற்பனையாகிறது. இதனால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் ₹127-க்கும் ஒரு கிலோ ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News August 9, 2025
‘BRA’வில் ஒளிந்துள்ள ஆபத்து

தற்காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் ஆபத்து கலந்துள்ளது. பெண்கள் அணியும் ‘பிரா’வும் இதில் விதிவிலக்கல்ல. சுமார் 64% பிரா பிராண்டுகளில், ஆபத்தான கெமிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரா, உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி, பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன.
News August 9, 2025
‘ரசாவதி’ படத்துக்கு மற்றுமொரு சர்வதேச விருது

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியானது ‘ரசாவதி’ திரைப்படம். இப்படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுன் தாஸுக்கும், சிறந்த ஒலி அமைப்புக்காகவும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கெனவே விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பிரான்சில் நடைபெற்ற NICE சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் சரவணன் இளவரசு மற்றும் சிவாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.