News October 11, 2024

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில் ₹83.97ஆக இருந்தது. பிறகு ₹83.96ஆக உயர்ந்து, ₹84.10ஆக சரிந்தது. எனினும், வர்த்தக நேர முடிவில் ₹84.09ஆக இருந்தது. நேற்றைய வர்த்தக நேர முடிவுடன் ஒப்பிடுகையில் 11 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது. மத்திய கிழக்கில் போர் சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்டவையே காரணமாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 17, 2025

அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

image

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

போன் செய்தபோது இறப்பு செய்தி: கண்கலங்கிய ஸ்டாலின்

image

பிறந்தநாள் வாழ்த்து கூற போன் செய்தபோது, சின்னம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தியை வேதனையுடன் விசிக தலைவர் திருமா சொன்னதும், ‘கண்கள் கலங்கினேன்’ என்று CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும், அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும், அவரது (திருமா) உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் நினைத்து துயரம் அடைந்தேன் என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

News August 17, 2025

அப்படி சொல்லவே இல்ல: அந்தர் பல்டி அடித்த அஸ்வின்

image

CSK அணிக்கு டெவால்ட் பிரேவிஸ் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து CSK வீரர் அஸ்வின் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு <<17426625>>CSK விளக்கமும்<<>> அளித்திருந்தது. இந்நிலையில், அஸ்வின் தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். பிரேவிஸ் விவகாரத்தில் பிசிசிஐ விதிகளை CSK மீறியதாக நான் சொல்லவில்லை, யார் மீதும் தவறில்லை எனக் கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார் அஸ்வின்.

error: Content is protected !!