News October 10, 2024
அரசு பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஏழுமலை (52). இவர் இன்று இரவு 7.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சென்னை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கிய ஏழுமலை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
கடலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
சிவாயம்: ஊராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (ஆக.21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமராட்சி அடுத்த சிவாயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி, பண்ருட்டி சசிகலா திருமண மண்டபம், திருமங்கலம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மற்றும் விருத்தாசலம் அடுத்த எடசித்தூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.