News October 10, 2024
அரசு பஸ் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ஏழுமலை (52). இவர் இன்று இரவு 7.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சென்னை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கிய ஏழுமலை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
வழிமறித்து தாக்கியவர் கைது

கீழிருப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ்(23) மற்றும் சிவராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிள் சென்றுள்ளனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானேஷ் குமார் (48), தளபதி (45) அகிய இருவரும் ரோட்டில் வழிமறித்து நின்றனர். இதனை கேட்ட சூரிய பிரகாஷ், சிவராஜ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டி விடுத்தனர். காயமடைந்த சிவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். காடாம்புலியூர் போலீசார் ஞானேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News November 16, 2025
கடலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


