News October 9, 2024
BREAKING: 8,932 பணியிடங்கள்.. TNPSC அறிவிப்பு

TNPSC குரூப் – 4 தேர்வு பணியிடங்களுக்கான எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 6,724 இடங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8,932ஆக அதிகரித்துள்ளது. குரூப்-4 பணியிடங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததை ஏற்று, TNPSC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Similar News
News December 7, 2025
போதை பொருள் வழக்கில் தயாரிப்பாளர் கைது

போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதாகியுள்ள சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் அளித்த தகவலின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு பிரமுகர்களுக்கு தினேஷ் போதைப்பொருள் விற்றுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. தனுஷின் அக்கா மகன் பவேஷ் நடிப்பில் ‘லவ் ஓ லவ்’ என்ற படத்தை தினேஷ் ராஜ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம்: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளுக்கு நாள் அரசியல் கருத்துகள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், தி.குன்றத்தில் தீபம் ஏற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நயினார் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களோடு நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம் என்ற அவர், CM வேண்டுமானால் அங்காளி, பங்காளி என சொல்லலாம் என்றார். இந்த விவகாரத்தில் ஸ்டாலினை நினைத்து வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.
News December 7, 2025
எந்த மரம் அதிகளவில் ஆக்சிஜன் கொடுக்கிறது?

மனிதன் உயிர்வாழ மரங்கள் ஆக்சிஜனை வழங்குகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த மரம் அதிக ஆக்சிஜனை வழங்குகிறது என தெரியுமா? ஆலமரம் தான் இந்த சிறப்பான காரியத்தை செய்கிறது. குறிப்பாக இரவில் அதிக ஆக்சிஜனை அவை வெளியிடுகின்றன. இதற்கடுத்து அரசமரமும், வேப்பமரமும் அதிக ஆக்சிஜனை கொடுக்கின்றன. நீங்களும் ஒரு மரத்தை நட்டு, வரும் சந்ததியினருக்கு உதவுங்கள். SHARE IT.


