News March 17, 2024
குமரியில் ரூ.1 லட்சம் அபராதம்

கேரளாவிலிருந்து குமரிக்கு கழிவுகள் ஏற்றி வந்த வாகனத்தை பொதுமக்கள் இன்று(மார்ச் 16) அதிகாலை சிறை பிடித்து குழித்துறை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்து வாகனத்தில் மருத்துவ மற்றும் மீன் கழிவுகள் இருப்பதை உறுதி செய்து ரூ.1,00,000 அபராதம் விதித்தனர். சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 31, 2025
குமரி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை கூலி தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49) . 2 நாள் முன்பு இவருக்கும், அவரது மனைவி ஜிபிரியாபீவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சஜ்ஜார் ஜாஹீர் வீட்டின் அருகே விஷம் குடித்த நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.30) உயிரிழந்தார். கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.
News October 31, 2025
குமரி: 12th, முடித்தால் ரூ.40,00 சம்பளத்தில் வேலை., APPLY

குமரி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12வது / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <
News October 31, 2025
குமரி: பயிற்சி ஆசிரியரால் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் டேக்வாண்டோ மையத்தில் பயிற்சி ஆசிரியராக இருந்து பயிற்சி வழங்கி வந்துள்ளார். மதுரையில் நடந்த போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற போது ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரைக்கு மாற்றம் செய்துள்ளனர்.


