News March 17, 2024
கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம புற, நகர் புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு அரசு பள்ளிகள் மூடல்

தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை குறைவால், ஒரு மாணவர் கூட இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் ஆறு பள்ளிகள் மூடப்பட இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தக் அறிவிப்பால் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு 32 பள்ளிகள் கள்ளக்குறிச்சியில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிப்பு

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை கள்ளக்குறிச்சியில் 6,194 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே கள்ளக்குறிச்சி நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT
News August 12, 2025
கள்ளக்குறிச்சி மக்களே கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க

▶️நகராட்சி- 3 (கள்ளக்குறிச்சி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டை)
▶️பேரூராட்சிகள்- 5
▶️வருவாய் கோட்டம்- 2
▶️தாலுகா-7
▶️வருவாய் குறுவட்டம்- 34
▶️வருவாய் கிராமங்கள்-562
▶️ஊராட்சி ஒன்றியம்-9
▶️கிராம பஞ்சாயத்து-412
▶️MP தொகுதி-1 (கள்ளக்குறிச்சி)
▶️MLA தொகுதி- 4
▶️மொத்த பரப்பளவு – 3529.67 ச.கி.மீ
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!