News March 17, 2024
நெல்லை:எம்எல்ஏ அலுவலகம் மூடல்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. MLA அலுவலகங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக பூட்டி அதன் சாவியை அந்தந்த தாலுகா தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பாளை எம்எல்ஏ அலுவலகம் உடனடியாக பூட்டப்பட்டு சாவியை தாசில்தாரிடம் நேற்று (மார்ச் 16) ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News October 22, 2025
தீபாவளி விதிமீறல் பட்டியலை வெளியிட்ட எஸ்பி

நெல்லையில் தீபாவளி பண்டிகையின் போது விதிமீறல் தொடர்பாக மொத்தம் 521 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் 83, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 200, அதி வேகமாக வாகனம் ஓட்டியதாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பட்டாசு நேர விதிமுறை மீறல் சம்பந்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 21, 2025
நெல்லை: இன்று பிற்பகல் முதல் சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு இன்று கூடுதலாக 1 நாள் விடுமுறை அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு வந்தவர்கள் தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்டு வெளியூர் பணிகளுக்கு செல்வதற்காக இன்று மாலை முதல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோவைக்கு தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்.