News March 17, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் ➤ ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு முன்னால் குறைந்தபட்சம் ஒரே கட்டமாக ஒரே தேர்தல் என்பதை முயற்சிக்கலாமே என கமல்ஹாசன் கேள்வி ➤ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் ➤ ஐ.பி.எல் : சென்னை-பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 18) தொடங்குகிறது.

Similar News

News April 12, 2025

தனிக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்.. விஜய் உடன் கூட்டணியா?

image

ஓபிஎஸ் தனது ஆதரவாளர் மூலம் புதிய கட்சியை ECI-ல் பதிவு செய்துள்ளார். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் என அமித்ஷா கூறியுள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவியின் நிலை என்ன என்பது கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில், தனது ஆதரவாளர் ஜோதிராமன் மூலம் ‘MGR ADMK’ என்ற கட்சியை ஓபிஎஸ் பதிவு செய்துள்ளார். NDA கூட்டணியில் சேர்க்காவிட்டால் 2026-ல் தனித்தோ (அ) விஜய் உடன் சேர்ந்தோ களம் காணத் திட்டமாம்.

News April 12, 2025

இன்று IPL-ல் டபுள் ட்ரீட் வெயிட்டிங்!

image

இன்று IPL ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. மதியம் 3:30-க்கு LSG vs GT, இரவு 7:30-க்கு SRH vs PBKS என 2 மேட்ச் நடைபெறவுள்ளது. தொடர் வெற்றிகளை பெறும் LSG, GT மேட்ச் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிரடியாக ஆரம்பித்த SRH, அடுத்து எல்லாமே சறுக்கல் என தவிக்கிறது. மறுமுனையில் PBKS, மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வெயிட் பண்ணிட்டு இருக்கு! எந்த 2 டீம்ஸ் ஜெயிக்க போகுது?

News April 12, 2025

திமுக மட்டும் என்ன செய்தது? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

image

அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சிக்கும் திமுகவுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூடா நட்பு கேடாய் விளையும் என கருணாநிதி காங்கிரஸை விமர்சிக்க, திமுகவின் ஊழலை காங்கிரஸ் தோளில் சுமக்கிறது என ஈவிகேஎஸ் பதிலடி கொடுத்ததை தற்போது மீம்ஸாக பதிவிட்டு வருகின்றனர். அரசியலில் கூட்டணி மாற்றம் சகஜம் என்றாலும் நாகரீக விமர்சனம் வேண்டும் என ஒரு தரப்பு பதிவிட்டு வருகிறது. உங்கள் கருத்தை நீங்கள் சொல்லுங்க.

error: Content is protected !!