News March 16, 2024
தேனி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 25 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு உடனடியாக “Drug FreeTN” என்ற செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா ப்ரியா தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (08.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 8, 2026
தேனியில் இளைஞர் விளையாட்டுப் போட்டி; ரூ.6,000 பரிசு!

இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – 2026’ போட்டிகள் வரும் ஜன.22 முதல் பிப்.08 வரை நடைபெற உள்ளது. https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜன. 21-க்குள் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6,000 வரை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


