News September 21, 2024
சகுனிகள் இருக்கும் சமூகம் இது: ரஜினி தெறி பேச்சு

‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “ஒருபடம் தோல்வி அடைந்து விட்டால், அடுத்த படம் ஹிட் கொடுக்கும் வரை தூக்கம் இருக்காது. சகுனிகள் அதிகம் வாழும் சமூகம் இது. இங்கு நாம் நியாயவாதியாக மட்டும் இருந்தால் போதாது. சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே இருந்தால்தான் இங்கு நாம் பிழைக்க முடியும்” எனக் கூறினார்.
Similar News
News August 22, 2025
BREAKING: பாஜகவில் இணையும் திமுகவின் முகம்

திமுகவின் Ex செய்தித்தொடர்பாளர் KS ராதாகிருஷ்ணன் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைகிறார். நெல்லையை சேர்ந்த இவர், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். கடந்த 2022-ல் மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சனம் செய்ததற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 1989, 1996 தேர்தல்களில் கோவில்பட்டியில் போட்டியிட்ட இவர், தென் மாவட்டங்களில் இப்போதும் திமுகவின் முகமாக அறியப்படுகிறார்.
News August 22, 2025
நடிகைகள் பாலியல் புகார்.. MLA பதவி விலகல்?

கேரள நடிகைகள் பாலியல் புகார் அளித்த நிலையில், பாலக்காடு MLA ராகுல் மாங்கூட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, அவர் மாநில இளைஞர் காங்., தலைவர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று திருநங்கை ஒருவரும், MLA மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 2026-ல் தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்விவகாரம் காங்கிரஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
News August 22, 2025
KYC அப்டேட் செய்யாத ஜன்தன் வங்கி கணக்குகள் முடக்கம்?

செப்.30-க்குள் KYC அப்டேட் செய்யப்படாத ஜன்தன் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என செய்திகள் வெளியாகின. ஆனால் இது தவறான தகவல் என்று PIB Fact Check தெரிவித்துள்ளது. KYC அப்டேட் செய்வது அடிப்படையான ஒன்று என்றாலும், அப்டேட் செய்யாவிட்டாலும் வங்கிக் கணக்கு முடக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, ஜூலை 31-ம் தேதி படி, 13.04 கோடி <<14845578>>ஜன்தன்<<>> வங்கிக் கணக்குகள் செயலற்று இருப்பதாக மத்திய அரசு கூறியது.