News September 15, 2024
களை எடுக்க ஸ்டாலின் முடிவு?

திமுகவில் குறுநில மன்னர்கள் போல செயல்படும் நிர்வாகிகளை களை எடுக்க CM ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அக்கட்சியின் பவள விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, திமுக கட்சி நலனுக்காக சில அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை அவர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அப்போது மூத்த தலைவர்கள் பலரின் சுமையை குறைத்து, இளம் தலைமுறைக்கு பொறுப்புகளை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News October 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 18, 2025
மெஹுல் சோக்ஷியை நாடு கடத்த உத்தரவு

பல்வேறு வங்கிகளில் ₹13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு, வைர வியாபாரி மெஹுல் சோக்ஷி பெல்ஜியம் தப்பி சென்றார். இந்நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அவரை பெல்ஜியம் அரசு கைது செய்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு அவரை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக நாடுகடத்த சாத்தியமில்லை என தெரிகிறது.
News October 18, 2025
அதிமுகவை EPS அழித்து வருகிறார்: TTV தினகரன்

துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை EPS அழித்து வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக கட்சி என்பது EPS என்ற தனிநபரின் கட்டுபாட்டில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் அமமுக கூட்டணி, துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வெற்றி கூட்டணியாகவும் அமையும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.