News September 15, 2024
Apply Now: இன்றே கடைசி நாள்

IDBI வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் & மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள். வயதுவரம்பு: 28-40. சம்பளம்: ₹1,57,000. கல்வித் தகுதி: Any PG Degree, JAIIB, CAIIB, MBA (4 ஆண்டு பணி அனுபவம்). தேர்வு முறை: நேர்முகத் தேர்வு & குழு விவாதம். கூடுதல் தகவல்களுக்கு இணைய <
Similar News
News August 18, 2025
அன்பும், காதலும் பேசும் தம்பதியர் தினம் இன்று!

கைப்பிடித்த நாள் முதல் இறுதி வரை கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதி தேசிய தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. சகித்துக் கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, புன்சிரிப்புடன் விட்டுக் கொடுத்து ரசித்துக் கொண்டே வாழ்வது தான் வாழ்க்கை. இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் தோள் கொடுத்து, கடமையில் கண்ணாக வாழ்ந்து பாருங்கள், வாழ்க்கை வசந்தமாகும்.
News August 18, 2025
இந்திய அணிக்கு கோச்சாகும் எம்.எஸ்.தோனி?

இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இந்திய Ex வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அந்த ஆர்வம் தோனிக்கு இருப்பதாக தெரியவில்லை என்றும், விளையாடுவதை விட சில சமயங்களில் பயிற்சியாளராக இருப்பது கடினம் எனவும் தெரிவித்தார். தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராகணும் என நினைக்கிறீங்களா?
News August 18, 2025
10 நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி முன்பதிவு

அக்.20-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 10 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களிலேயே காலியாகியுள்ளன. அக்.18-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.19-க்கு ஆக.20-லும் தொடங்கும்.