News August 18, 2025
அன்பும், காதலும் பேசும் தம்பதியர் தினம் இன்று!

கைப்பிடித்த நாள் முதல் இறுதி வரை கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 18-ம் தேதி தேசிய தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. சகித்துக் கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை, புன்சிரிப்புடன் விட்டுக் கொடுத்து ரசித்துக் கொண்டே வாழ்வது தான் வாழ்க்கை. இன்பத்தில் இணைந்து, துன்பத்தில் தோள் கொடுத்து, கடமையில் கண்ணாக வாழ்ந்து பாருங்கள், வாழ்க்கை வசந்தமாகும்.
Similar News
News December 10, 2025
நீட்டை ரத்து செய்யாததை கண்டித்து அதிமுக தீர்மானம்

அதிமுக கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤பேரிடர்களின் போது மக்களை பாதுகாப்பதில் தோல்வியடையும் TN அரசுக்கு கண்டனம் ➤அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆமை வேகம் காட்டுவதாக கண்டனம் ➤கோதாவரி-காவிரி இணைப்பில் அக்கறை இல்லை என கண்டனம் ➤நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம் ஆகிய வாக்குறுதிகளை காப்பாற்றாததற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News December 10, 2025
திருப்பதியில் அடுத்த ஊழல்: Dupatta Scam!

திருப்பதியில் லட்டு கலப்படம், உண்டியல் பணம் திருட்டை தொடர்ந்து ‘துப்பட்டா ஸ்கேம்’ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு வரும் VIP பக்தர்களுக்கு பட்டு துண்டு அணிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், இவை பட்டால் செய்யப்படாமல், Polyester-ஆல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015- 2025 வரை இப்படி ஏமாற்றி, ₹54 கோடி வரை ஊழல் செய்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இன்னும் திருப்பதியில் என்னென்ன ஊழலோ!
News December 10, 2025
PM பாதி நாள் ஊரிலேயே இருப்பதில்லை: பிரியங்கா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் வேளையில், ராகுல் காந்தி ஜெர்மனி செல்கிறார் என தகவல் வெளியானதால், பாஜக அவரை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்த பிரியங்கா காந்தியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், PM மோடி பாதி நாள்கள் வெளியூரில் தான் இருக்கிறார் எனவும், ஏன் அவரை நோக்கி இந்த கேள்வியை எழுப்புவதில்லை என்றும் பதிலளித்துள்ளார்.


