News September 10, 2024
நிதி ஒதுக்கீடு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ₹500 கோடியை ஒதுக்கீடு செய்து, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் எந்த பணியும் நடக்கவில்லை என எதிர்கட்சியினர் விமர்சித்தனர். இந்நிலையில், 22,061 சிறுபாசன ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தில், முதற்கட்டமாக 5,000 நீர்நிலைகள் புனரமைக்கப்படவுள்ளன.
Similar News
News August 18, 2025
ECI தலைமை ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்?

ECI-ன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3ல் இரு பங்கு ஆதரவு பெற்று இந்த பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றால், அந்த அதிகாரியை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். பின்னர் குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
News August 18, 2025
பச்சைப்பொய் கூறும் CM ஸ்டாலின்: EPS விளாசல்

525 வாக்குறுதிகளில் ஸ்டாலின் அரசு 10% கூட நிறைவேற்றாமல் 98% நிறைவேற்றிவிட்டதாக பச்சைப்பொய் கூறி வருகிறது என EPS சாடியுள்ளார். கலசபாக்கத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், சிலிண்டருக்கு ₹100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வாக்குறுதிகள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் கருத்து?
News August 18, 2025
4 நாள்களில் ₹404+ கோடி.. வசூல் சூறாவளியாக மாறிய ‘கூலி’..!

ரஜினி நடிப்பில் ரிலீசாகி வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது ‘கூலி’ திரைப்படம். ஆக. 14-ல் வெளியான இப்படம் 4 நாள்களில் உலகளவில் ₹404+ கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உலகளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை கூலி படைத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழில் முதல் ₹1,000 கோடி வசூலான படம் என்ற சாதனையை ‘கூலி’ படைக்குமா?