News August 25, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News August 22, 2025
சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி?

ரஜினி – கமலை வைத்து லோகேஷ் இயக்கவுள்ளதால் ‘கைதி 2’ படப் பணிகள் தள்ளிப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்படத்திற்காக ஏற்கெனவே கார்த்தி கால்ஷீட் கொடுத்துள்ளதால், தற்போது அதைக் கொண்டு சுந்தர்.சி இயக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளாராம். இதன் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்குள் ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வேலைகளை சுந்தர் முடிக்கவுள்ளார். இந்த காம்போ எப்படி இருக்கும்?
News August 22, 2025
பாக்., அணியுடன் மோதுவதை உறுதி செய்த மத்திய அரசு!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாக்., உடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதில்லை. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் ஒரே குரூப்பில் இந்தியா, பாக்., இடம்பெற்றது. இதனால் இரு அணிகளும் மோதுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ICC தொடர்களில் இந்தியா விளையாடும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாக்.,ல் நடைபெறும் போட்டிகளிலும், அவ்வணியுடன் இருதரப்பு தொடர்களிலும் விளையாடாது என்றும் விளக்கியுள்ளது.
News August 22, 2025
திமுகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. விஜய் அதிர்ச்சி

கரூரில் தவெக முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவுக்கு தாவியுள்ளனர். செந்தில் பாலாஜி முன்னிலையில், TVK ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுக, பாஜகவினரை குறிவைத்து திமுகவில் சேர்த்து வந்த Ex அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தவெகவினரையும் டார்கெட் செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.