News August 24, 2024

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி…

image

தங்கப் பத்திர திட்டத்திற்கு ஒரே அடியாக மூடு விழா காண மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால், அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு டாடா காட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செப். அடுத்த சீரிஸ் வெளியாகும் என காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News August 18, 2025

இந்திய அணிக்கு கோச்சாகும் எம்.எஸ்.தோனி?

image

இந்திய அணிக்கு தோனி பயிற்சியாளராக வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இந்திய Ex வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அந்த ஆர்வம் தோனிக்கு இருப்பதாக தெரியவில்லை என்றும், விளையாடுவதை விட சில சமயங்களில் பயிற்சியாளராக இருப்பது கடினம் எனவும் தெரிவித்தார். தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராகணும் என நினைக்கிறீங்களா?

News August 18, 2025

10 நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி முன்பதிவு

image

அக்.20-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 10 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. குறிப்பாக, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களிலேயே காலியாகியுள்ளன. அக்.18-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.19-க்கு ஆக.20-லும் தொடங்கும்.

News August 18, 2025

51 மாதங்களில் ₹50 ஆயிரம் சேமிப்பு: CM ஸ்டாலின்

image

‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்துக்கு அரசு செலவழிப்பது, மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு என CM ஸ்டாலின் கூறியுள்ளார். வெளியில் செல்ல வேண்டுமென்றால் ₹50 தேவை என்பதால் வீட்டினுள்ளேயே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இத்திட்டம் தகர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திராவிட மாடல் ஆட்சியின் 51 மாதங்களுக்குள் இதன் மூலம் ₹50 ஆயிரம் வரை பெண்கள் சேமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!