News August 22, 2024
OLA CEO காட்டுல பண மழைதான்..!

ஓலா நிறுவனத்தின் CEO பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு கடந்த 7 வர்த்தக நாள்களில் ₹20,856 கோடியாக அதிகரித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது முதலே அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ₹30க்கு பட்டியலிடப்பட்ட பங்குகள், தற்போது ₹157 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. பாவிஷ் அகர்வால் 30%, அதாவது 132.39 கோடி பங்குகளை வைத்திருக்கிறார்.
Similar News
News December 9, 2025
₹35,400 சம்பளம்.. நாளையே கடைசி: APPLY

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2,569 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் Level 6 அடிப்படையில் வழங்கப்படும். தேர்வு முறை: Tire 1 & 2, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.10. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 9, 2025
அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு புதிய வரியா?

இந்திய பொருள்களுக்கு USA-வில் ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய அரசு மானியங்கள் வழங்கி, USA சந்தையில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டம் ஏற்படுவதாக USA விவசாயிகள் டிரம்ப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை ‘ஏமாற்று வேலை’ என்று விமர்சித்த டிரம்ப், புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
News December 9, 2025
இன்னும் சற்றுநேரத்தில் தவெகவில் இணைகிறார்கள்

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி செல்லும் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக, சமீபத்தில் தவெகவில் இணைந்த சாமிநாதன் (புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர்), கே.ஏ.யு.அசனா (அதிமுக முன்னாள் MLA) ஆகியோர், தங்களின் ஆதரவாளர்களை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


