News August 21, 2024
அலுவலகம் வர ஜெட் விமானம் கேட்ட Starbucks CEO

காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் புதிய CEO பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார். பிரையன் கலிபோர்னியாவில் வசித்து வருவதால், அவர் சியாட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர 1,600 KM பயணிக்க வேண்டியிருக்கும். நிறுவன கொள்கைபடி, 3 நாள்கள் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளதால், அவர் ஜெட் விமானம் கோரியுள்ளார். அவரது ஆண்டு சம்பளம் ₹13.4 கோடி, இதுதவிர ₹60 கோடி போனஸ் வழங்கப்படும்.
Similar News
News December 8, 2025
கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News December 8, 2025
செங்கோட்டையன் விலகலுக்கு இபிஎஸ் காரணம்: டிடிவி

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.
News December 8, 2025
அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்திருக்கிறீர்களா?

அதிக சத்தத்துடன் அலாரம் அடித்தும் டைம் ஆச்சு என பதற்றத்துடன் எழுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிப்பதால், இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டு, ரத்த நாளங்களில் சுருக்கம், ரத்த ஓட்டம் குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, மெல்லிய சத்தம் கொண்ட அலாரமை 10 நிமிடங்கள் முன்பு வைத்து பழகுங்க. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.


